உளவு பார்த்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

உளவு பார்த்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

உளவு பார்த்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2019 | 12:22 pm

Colombo (News 1st) சவுதி அரேபியாவிற்காக உளவு பார்த்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சவுதி அரசாங்கத்தின் பிரபலமானவர்கள் உட்பட ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற சவுதி முகவர்கள் முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் சன்பிரான்ஸிஸ்கோவில் நேற்றையதினம் வௌியாகியுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நீதிமன்ற ஆவணங்களில் அமெரிக்கப் பிரஜை ஒருவருடைய பெயரும் சவுதி அரேபியப் பிரஜை ஒருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனைத் தவிர மற்றுமொரு சவுதி அரேபியப் பிரஜையும் உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்