உலக நாயகனின் 65 ஆவது பிறந்த தினம் இன்று

உலக நாயகனின் 65 ஆவது பிறந்த தினம் இன்று

உலக நாயகனின் 65 ஆவது பிறந்த தினம் இன்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Nov, 2019 | 3:23 pm

உலக நாயகன் கமல் ஹாசனின் 65 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

கமல் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடன இயக்குநர் என பல முகங்களைக் கொண்டவர்.

‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கமலின் 60 வருட கால திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு பலவிதமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், தனது பிறந்த நாளை சொந்த ஊரான பரமகுடியில் கொண்டாடிய கமல் ஹாசன், தனது தந்தை டி. ஶ்ரீநிவாசனின் நினைவு தினமான இன்று அவரது சிலையொன்றைத் திறந்து வைத்துள்ளார்.

திரையுலகில் பலரது மனதையும் கொள்ளை கொண்டுவந்த நடிகர் கமல் ஹாசன் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்