by Staff Writer 06-11-2019 | 7:57 AM
Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் சுத்தமான பசுமை நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்ட நகரங்கள் எழில்மிகு நகரங்களாக மாற்றப்படவுள்ளன.
இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான விசேட செயலமர்வு பல்லேகமவில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.