மகாபாரதத்தில் திரௌபதியாக தீபிகா

மகாபாரதத்தில் திரௌபதியாக தீபிகா

மகாபாரதத்தில் திரௌபதியாக தீபிகா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Nov, 2019 | 3:18 pm

வரலாற்றுக் கதையான மகாபாரதம் தற்போது ஹிந்தியில் படமாக்கப்பட்டு வருகின்றது.

படத்தின் தயாரிப்பாளரான தீபிகா படுகோனே திரௌபதியாக நடிக்கின்றார்.

‘பத்மாவத்’ படத்தின் வெற்றியை அடுத்து, தீபிகாவின் புதிய அவதாரமாக இது அமைந்துள்ளது.

திரௌபதியாக நடிக்க கிடைத்தமையை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறிய தீபிகா, இதுவரை ஆண்களின் கண்ணோட்டத்திலேயே மகாபாரதம் படமாக்கப்பட்டு வந்ததாகவும் தனது இயக்கத்தில் உருவாகும் மகாபாரதமானது திரௌபதியின் கண்ணோட்டத்தில் அமைந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தீபிகாவின் மகாபாரதமானது 2021 தீபாவளி பண்டிகைக்கு வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்