கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2019 | 1:32 pm

Colombo (News 1st) புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்பிரகாரம், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த 20 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

ஏற்கனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த 65 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்