MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

by Staff Writer 05-11-2019 | 11:35 AM
Colombo (News 1st) MCC எனப்படும் Millennium Challenge Corporation நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இன்று (05) கைச்சாத்திடத் தயாராகுவதாகத் தமக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டாம் என ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனை உடனடியாக இரத்து செய்யுமாறு Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அறிவிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு நிதி அமைச்சிற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்பதே தமது சங்கத்தின் நிலைப்பாடு என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.