MCC உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டாம்

MCC உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டாம்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

by Staff Writer 05-11-2019 | 7:26 PM
Colombo (News 1st) MCC எனப்படும் Millennium Challenge Corporation ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திடுவதற்கு தயாராவதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று முற்பகல் அறிவித்தது. எவ்வாறாயினும், அத்தகைய உடன்படிக்கையொன்று இன்றைய தினம் கைச்சாத்திடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. MCC உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டாம் என ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ இன்று முற்பகல் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் அதனை இரத்து செய்ததாக Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அறிவிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏனைய செய்திகள்