ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2019 | 6:58 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.

கட்சியின் பதில் தவிசாளர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாசவின் தலைமையில் இன்று இரவு 7 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த நிலையில், கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அப்பாற்சென்று, ஒழுக்கவிதிகளை மீறுவோருக்கு எதிராக மத்திய செயற்குழு கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை மீறுபவர்கள், உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்