பொரலஸ்கமுவயில் போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

பொரலஸ்கமுவயில் போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

பொரலஸ்கமுவயில் போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2019 | 10:52 am

Colombo (News 1st) பொரலஸ்கமுவ பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ நகரிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5000 ரூபா நாணயத்தாள்கள் 3 சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நாணயத்தாளை அச்சிடும் பகுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 7, ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாணயத்தாளை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கணனி மற்றும் ஸ்கேனர் இயந்திரமொன்றும் ​பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்