பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2019 | 4:10 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல வழக்கை இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 365 இலட்சம் ரூபா பணத்தை செலவிட்டு GI குழாய்களை கொள்வனவு செய்து, அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் நோக்குடன் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்து, பிரதிவாதிகள் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்