தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 44 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 44 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 44 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2019 | 9:25 am

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் 41 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புபட்ட 41 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை குறித்து மொத்தமாக 64 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் சட்டத்தை மீறியமை மற்றும் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் 44 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்