சுமூகமான முறையில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

சுமூகமான முறையில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

சுமூகமான முறையில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2019 | 4:15 pm

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் இன்று தபால் மூலம் வாக்களித்தனர்.

இந்த உத்தியோகத்தர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க நேற்றும் (04) சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்கட்ட தபால் மூல வாக்களிப்பு கடந்த 31 ஆம் திகதியும் இம்மாதம் முதலாம் திகதியும் நடைபெற்றது.

இந்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாமற்போனவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வாக்களிக்க முடியும்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 6,59,504 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்