நெல் சந்தைப்படுத்தல் சபையின் அறிவித்தல்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் அறிவித்தல்

by Staff Writer 04-11-2019 | 2:08 PM
Colombo (News 1st) இருபதாயிரம் மெற்றிக் தொன் அரிசி, சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 10 000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் 10 000 மெற்றிக் தொன் சம்பா அரிசியும் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அரிசிக்கான நிர்ணய விலையைப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.