கலிபோர்னியாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

காட்டுத் தீ ; கலிபோர்னியாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

by Staff Writer 04-11-2019 | 2:34 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திற்கான சமஷ்டி நிதியுதவியை நிறுத்தப்போவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூஸம் (Gavin Newsom), காடுகள் முகாமைத்துவத்தில் மிகவும் மோசமாகச் செயற்பட்டதாக ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் காட்டுத் தீ ஏற்படுகின்ற நிலையில், கவின் நியூஸம் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக தம்மை அணுகியதாகவும் இருப்பினும் எதுவுமே ஏற்படவில்லையென்ற நிலையில் நிதியுதவியை நிறுத்தவுள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் நீங்கள் நம்பிக்கை கொள்வதில்லை என ஜனாதிபதி ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு, கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூஸம் பதிலளித்துள்ளார்.