இந்தியாவுடனான முதலாவது T20 இல் பங்களாதேஷ் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 இல் பங்களாதேஷ் வெற்றி

by Staff Writer 04-11-2019 | 1:59 PM
Colombo (News 1st) இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்திய - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. 149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 19.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை குவித்தார். பங்களாதேஷ் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஷிகர் தவான் 41 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஷபியுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலை வகிக்கின்றது.