வியட்நாமியர்களின் உயிரிழப்பு: கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பு

வியட்நாமியர்களின் உயிரிழப்பு: கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பு

வியட்நாமியர்களின் உயிரிழப்பு: கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2019 | 7:07 pm

Colombo (News 1st) பிரித்தானியாவின் எசெக்ஸில் இடம்பெற்ற வியட்நாமைச் சேர்ந்த 39 பேரின் உயிரிழப்பானது அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பு என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லைகளை மூடும் பிரித்தானியாவின் கொள்கைக் குடியேற்றக் ​கோரிக்கையாளர்கள் கடத்தல்காரர்களிடம் சிக்க வாய்ப்பு ஏற்படுத்துவதாக அந்நாட்டு வௌிவிவகார தெரிவுக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரித்தானியா உதாரணமாக செயற்பட வேண்டும் என தெரிவுக்குழுவின் தலைவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான Tom Tugendhat தெரிவித்துள்ளார்.

மனிதக் கடத்தல்களை தடுப்பது தற்போது மிக முக்கிய தேவை என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த கொலைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் வியட்நாமில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு சட்டவிரோத ஆட்கடத்தல்களை முன்னெடுத்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வியட்நாம் தலைமை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவருக்கு எதிராக பிரித்தானிய பொலிஸார் கடந்த வாரத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் கொள்கலன் ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்