கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 இல் பங்களாதேஷ் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 இல் பங்களாதேஷ் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 இல் பங்களாதேஷ் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2019 | 1:59 pm

Colombo (News 1st) இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 19.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை குவித்தார்.

பங்களாதேஷ் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஷிகர் தவான் 41 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஷபியுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலை வகிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்