by Staff Writer 03-11-2019 | 2:10 PM
Colombo (News 1st) உள்நாட்டு மூலிகைச் செய்கையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நிலவேம்பு, வல்லப்பட்டை மற்றும் கற்றாழை உள்ளிட்ட 30 வகை மூலிகைத்தாவர செய்கைகள் விஸ்தரிக்கப்படவுள்ளன.
உள்நாட்டு சந்தையை கருத்திற்கொண்டு, மூலிகைத்தாவர செய்கையை வர்த்தக செய்கையாக மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.