அக்குரஸ்ஸ வாகன விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 03-11-2019 | 7:47 AM
Colombo (News 1st) காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதியின் அங்குலுகஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு மின்சார சபைக்கு சொந்தமான லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் 35 மற்றும் 65 வயதான பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதுடன், இவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.