பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 100 பேர் கைது

பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; பெண்கள் உட்பட 100 பேர் கைது

by Staff Writer 03-11-2019 | 10:07 AM
Colombo (News 1st) தெஹிவளை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்ததில், போதைப்பொருளுடன் யுவதிகள் உள்ளிட்ட100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களில் 17 யுவதிகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா, சட்டவிரோத சிகரட்கள், மதுபானம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பலாங்கொடை, களுத்துறை, குருணாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 முதல் 48 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (03) கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.