மடகஸ்காரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

மடகஸ்காரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

மடகஸ்காரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2019 | 4:59 pm

Colombo (News 1st) மடகஸ்காரில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற கார் விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் மூவரும் பயணித்த கார் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.

காரும் இலங்கையர்கள் மூவரினது உடல்களும் மடகஸ்கார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர்களின் சடலங்கள் மடகஸ்கார் வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

சீஷெல்ஸூக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக இந்த விபத்து தொடர்பில் மேலதிக தகவல்களை ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்