பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

02 Nov, 2019 | 7:50 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் மற்றுமொரு மக்கள் சந்திப்பு நேற்று (01) இரவு பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பிலியந்தலைவாழ் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு அமோக வரவேற்பளித்தனர்.

இந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நாட்டில் எஞ்சியிருக்கும் பயங்கரவாதத்தை அழித்து, கொலைகள், போதைப்பொருள் வர்த்தகம், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளித்தார்.

மேலும், நாட்டினைப் பலப்படுத்தி விழுமியங்கள் மிகு நாடாக மேம்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்து மட்டக்களப்பு தன்னாமுனை பகுதியில் கூட்டமொன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, ஜலனி பிரேமதாச, சனாஸ் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்