by Bella Dalima 02-11-2019 | 8:40 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
கம்பஹா - கணேமுல்ல பகுதி மக்கள் கோட்டாபயவிற்கு அமோக வரவேற்பளித்தனர்.
கணேமுல்ல பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸ, தாம் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கினார்.
தாம் பலருடனும் கலந்துரையாடி முன்வைத்துள்ள வேலைத்திட்டம் நடைமுறை சாத்தியமானது எனவும் தூரநோக்குடையது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் (01) குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
மாவத்தகம பகுதி மக்களால் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸ, வர்த்தகர்களுக்கு சுமையில்லாத இலகுவான வரி விதிப்பு முறைமையை அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஸ நேற்று இரவு பன்னல சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, நாட்டைப் பிரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்ட அவர், தமிழ் கடும்வாதக் கட்சி தம்மிடம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்ததாகக் கூறினார்.