சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு: விரைவில் நிவர்த்திக்கப்படும் என்கிறது நுகர்வோர் விவகார அதிகார சபை

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு: விரைவில் நிவர்த்திக்கப்படும் என்கிறது நுகர்வோர் விவகார அதிகார சபை

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு: விரைவில் நிவர்த்திக்கப்படும் என்கிறது நுகர்வோர் விவகார அதிகார சபை

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2019 | 3:24 pm

Colombo (News 1st) சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாடு எதிர்வரும் சில நாட்களில் நிவர்த்திக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு தொடர்பில் நாட்டிலுள்ள பிரதான கேஸ் நிறுவனங்கள் இரண்டுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் லலித் சேனவீர குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்துள்ள கப்பல்கள் இறங்குதுறையை வந்தடைவதில் காணப்படும் தாமதம் சீராகும் போது இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என அவர் கூறினார்.

இதேவேளை, அதிக விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த 37 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்துள்ளமை மற்றும் அதிக விலையில் விற்பனை செய்கின்றமை தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் பதிவாவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் லலித் சேனவீர தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்