எசெக்ஸில் கண்டெய்னர் லொறியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல

எசெக்ஸில் கண்டெய்னர் லொறியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல

எசெக்ஸில் கண்டெய்னர் லொறியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல

எழுத்தாளர் Bella Dalima

02 Nov, 2019 | 5:47 pm

இங்கிலாந்திலுள்ள எசெக்ஸில் கண்டெய்னர் லொறியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கண்டெய்னர் லொறியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 39 பேரும் தொடக்கத்தில் சீனர்கள் என்று கருதப்பட்டது.

இந்நிலையில், இறந்தோரில் தங்களின் உறவினர்கள் இருப்பதாக வியட்நாம் குடும்பங்கள் பல தாங்களே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளன.

இறந்த 31 ஆண்கள் மற்றும் 8 பெண்களின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இறந்தவர்கள் அனைவரும் வியட்நாமியர்கள் என்று தாம் நம்புவதாகவும் வியட்நாம் அரசோடு தாம் தொடர்பில் இருந்து வருவதாகவும் துணை தலைமை பொலிஸ் அதிகாரி டிம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களை அடையாளம் காணும் நிலையில் பொலிஸார் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்