வெலிவேரிய கொலை வழக்கு நிறைவு

வெலிவேரியவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு நிறைவு

by Staff Writer 01-11-2019 | 5:20 PM
Colombo (News 1st) சுத்தமான குடிநீரைக் கோரி வெலிவேரிய நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கொலை செய்தமை மற்றும் தாக்கியமை தொடர்பில் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு இன்று நிறைவுக்கு வந்துள்ளது. வழக்கின் பிரதிவாதிகள் நால்வருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 94 குற்றச்சாட்டுகளின் கீழ் இராணுவ பிரிகேடியர் அருண தேஷப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கம்பஹா நீதவான் மஞ்சுள திலகரட்ண இன்று உத்தரவிட்டார்.