டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

by Bella Dalima 01-11-2019 | 4:30 PM
Colombo (News 1st) டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 1 மணியளவில் பயணிகள் வருகை தரும் நுழைவாயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பகட்ட சோதனையின் போது, வெடிபொருட்கள் உள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.