பாக்தாதி உயிரிழந்ததை உறுதி செய்தது ஐ.எஸ்

பாக்தாதி உயிரிழந்ததை உறுதி செய்தது ஐ.எஸ்

பாக்தாதி உயிரிழந்ததை உறுதி செய்தது ஐ.எஸ்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2019 | 4:45 pm

Colombo (News 1st) IS தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி உயிரிழந்துள்ளமையை IS அமைப்பு முதற்தடவையாக உறுதி செய்துள்ளது.

அத்துடன், தமது அமைப்பிற்கான புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹஷ்மியை நியமித்துள்ளதாக IS அறிவித்துள்ளது.

எனினும், புதிய தலைவர் தொடர்பிலான ஏனைய தகவல்களையோ, அவரின் நிழற்படத்தையோ IS அமைப்பு வௌியிடவில்லை என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தினர் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையில் IS அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தார்.

சிறப்பு படைகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அபுபக்கர் அல் பாக்தாதி தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்