தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கு செயற்பாட்டு குழு

தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்காக செயற்பாட்டு குழு நியமிக்கப்படவுள்ளது

by Bella Dalima 01-11-2019 | 4:15 PM
Colombo (News 1st) இலங்கையில் தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்காக செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தெங்கு தொழிற்துறையில் நிலவும் பிரச்சினை மற்றும் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தெங்கு உற்பத்தியை வெற்றிகரமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளரின் தலைமையிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளின் அங்கத்துவத்துடனும் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.