தலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு

தலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு

தலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2019 | 5:39 pm

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. இதேபோல், குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தள தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கக் கூடாது. மேலும், ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஜெ.தீபா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்