சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2019 | 3:37 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து இன்று முற்பகல் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இதற்கான நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் முன்னணி, புதிய தொழிலாளர் முன்னணி, ஶ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தேசிய திட்டம், நவ சமசமாஜ கட்சி, ஶ்ரீலங்கா ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி, பலமு பெரமுன மற்றும் மக்கள் தொழிலாளர் முன்னணி ஆகிய கட்சிகள் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

ஜனநாயக தேசிய காங்கிரஸ், முற்போக்கு தேசிய முன்னணி, புதிய தேசிய முன்னணி, தேசிய மக்கள் திட்டம், சுதந்திர இளையோர் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்