கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்

கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்

கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2019 | 3:45 pm

Colombo (News 1st) பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாரிய தொகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கஞ்சிப்பானை இம்ரான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் அரச பகுப்பாய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்