ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 31-10-2019 | 11:33 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை ஸ்தாபித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கொழும்பு மன்ற கல்லூரியில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இந்தக் கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர். கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு கதிரைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்