Colombo (News 1st) தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க இன்று வட மாகாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை அண்மித்த பகுதிகளில் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
இதன்போது,
இந்த நாட்டில் உள்ள இனங்கள் வடக்கு, தெற்கை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் இலங்கையை ஒரே குடும்பம் போன்று முன்கொண்டு செல்வதற்கான தேவையே எமக்குள்ளது. ஏனைய கட்சிகளால் செய்ய முடியாதவற்றை நாங்கள் நடுநிலை வகித்து முன்னெடுக்கின்றோம்
என மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரிலும் மகேஷ் சேனாநாயக்க பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.