லிட்ரோ கேஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ கேஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 31-10-2019 | 2:00 PM
Colombo (News 1st) சந்தையில் காணப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அவசியமான திரவப் பெற்றோலிய வாயு சிலிண்டர்களை சந்தையில் தடங்கலின்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீரற்ற வானிலை உள்ளிட்ட காரணிகளால் எரிவாயு இறக்குமதியில் தாமதம் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களுக்கான விலை குறைப்பு மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் இதற்கு காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலையால் எரிவாயு கப்பல்கள் இறங்குதுறையை அண்மிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் 900 தொடக்கம் 950 மெற்றிக் தொன் ஆகவிருந்த கொள்வனவு தற்போது 1300 மெற்றிக் தொன் வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கேள்வி அதிகரிப்பானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முழு விநியோகக் கட்டமைப்பிலும் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.