மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 31-10-2019 | 8:07 AM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள 16 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான்மட்டத்தை எட்டியுள்ளது. மழையுடனான வானிலையால் சுமார் 17000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தவிர 700 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்