by Staff Writer 31-10-2019 | 11:03 AM
Colombo (News 1st) பொலிஸ் அத்தியட்சகர்கள் 102 பேர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடனும் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
87 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரப் படையின் 14 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர, பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்திட்யசர்களாக பதவி வழங்கப்பட்டவர்களுள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.