அனைத்து வௌிநாட்டு உடன்படிக்கைகளும் மீள்திருத்தம் செய்யப்படும் – சஜித் பிரேமதாச

அனைத்து வௌிநாட்டு உடன்படிக்கைகளும் மீள்திருத்தம் செய்யப்படும் – சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 10:38 am

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம், அஸ்கிரி மற்றும் மல்வத்துபீட மகாநாயக்கர்களிடம் இன்று (31) கையளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ‘சஜித்தின் சமூக புரட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் முதலில் தேர்தல் விஞ்ஞாபனம் கையளிக்கட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரருக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் கையளிக்கப்பட்டுள்ளது.

கைச்சாத்திடப்பட்டுள்ள அனைத்து வௌிநாட்டு உடன்படிக்கைகளையும் மீள்திருத்தம் செய்வதாக சஜித் பிரேமதாச இதன்போது அஸ்கிரி பீட மகா நாயக்கரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட ACSA உடன்படிக்கையைத் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் நாட்டிற்கு ஏற்புடைய உடன்படிக்கைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல தயாராகவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச, அஸ்கிரி பீட மகாநாயக்கரிடம் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை தாம் நம்புவதாக அஸ்கிரி பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிடும் நிகழ்வு இன்று முற்பகல் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்