புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படும்

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படும்

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படும்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 7:47 am

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (31) வௌியிடப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன் முதல் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்பதே தமது முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமின்றி, நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்