பாகிஸ்தான் ரயிலில் சமையல் அடுப்பு வெடித்து தீ விபத்து: உயிரிழப்பு 73 ஆக உயர்வு

பாகிஸ்தான் ரயிலில் சமையல் அடுப்பு வெடித்து தீ விபத்து: உயிரிழப்பு 73 ஆக உயர்வு

பாகிஸ்தான் ரயிலில் சமையல் அடுப்பு வெடித்து தீ விபத்து: உயிரிழப்பு 73 ஆக உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

31 Oct, 2019 | 4:21 pm

Colombo (News 1st) பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலிண்டரை எடுத்து வந்ததால், இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தீ மூன்று ரயில் பெட்டிகளுக்கு பரவியுள்ளது.

பலர் எரியும் ரயிலில் இருந்து தப்பிக்க வெளியே குதித்ததால் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இரண்டு சமையல் அடுப்புகள் வெடித்துவிட்டன. அவர்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த சமையல் எண்ணெய் மேலும் தீயைக் கூட்டியுள்ளது

என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.

நீண்ட தூர பயணங்களில் சமையல் செய்வதற்கு பயணிகள் ரயிலில் அடுப்புகளை எடுத்து வருவது பெரும் பிரச்சினையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதியில், ரஹிம் யார் கான் நகருக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்