சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 10:18 pm

Colombo (News 1st) இன்று (31) வௌியிடப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கலந்துரையாடி, மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தமது கட்சியின் நிலைப்பாட்டை வௌியிடுவதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையிலான சிபாரிசுகளை முன்வைத்துள்ள வேட்பாளர் தொடர்பில் தாம் ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலும் தமது கட்சி ஆராய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்