ஐ.எஸ். தலைவர் பதுங்கியிருந்த கட்டடம் தொடர்பிலான காட்சிகள் வௌியீடு

ஐ.எஸ். தலைவர் பதுங்கியிருந்த கட்டடம் தொடர்பிலான காட்சிகள் வௌியீடு

ஐ.எஸ். தலைவர் பதுங்கியிருந்த கட்டடம் தொடர்பிலான காட்சிகள் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 9:10 am

Colombo (News 1st) வடக்கு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக முன்னெடுத்த சுற்றிவளைப்பு தொடர்பிலான காட்சிகளை அமெரிக்கா முதற்தடவையாக வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி இறுதியாகப் பதுங்கியிருந்த கட்டடத்தின் புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளது.

பக்தாதி குறித்த கட்டடத்தின் சுரங்கமொன்றில் பதுங்கியதுடன் தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து உயிரிழந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த கட்டடத் தொகுதி முற்றாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய தரைப்படையின் சிரேஷ்ட தளபதி Gen Kenneth McKenzie தெரிவித்துள்ளார்.

மேலும், அபூபக்கர் அல் பக்தாதியின் இரண்டு பிள்ளைகள் மற்றும் 4 பெண்களும் தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்