அரசாங்க காணிகளில் மரமுந்திரிகை உற்பத்தி

அரசாங்க காணிகளில் மரமுந்திரிகை உற்பத்தி

அரசாங்க காணிகளில் மரமுந்திரிகை உற்பத்தி

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 1:17 pm

Colombo (News 1st) இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்காக அரசாங்கக் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மரமந்திரிகை உற்பத்திக்கான பாரிய கோரிக்கை நிலவுவதை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் புத்தளத்தில் அமைந்துள்ள விவசாயப் பண்ணை அமைந்துள்ள காணியான அரசாங்கத்தின் காணி, மரமுந்திரிகையை உற்பத்தி செய்வதற்காக நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

இதற்காக பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்