வேலையின்மையை இல்லாதொழிக்க தௌிவான திட்டமுள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு

by Bella Dalima 30-10-2019 | 9:51 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து கேகாலை - ருவன்வெல்ல பகுதியில் இன்று பிரசாரக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருவன்வெல்ல பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர். இதன்போது உரை நிகழ்த்திய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, நீண்டகாலமாக உள்ள பரீட்சை கல்வி முறைக்கு பதிலாக, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை அறிமுகப்படுத்தி மாணவர்களின் திறனை விருத்தி செய்வதற்கு குறுகிய காலத்தில் உரிய பயிற்சிகளை வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் அதிருப்தியை இல்லாதொழிக்க தம்மிடம் தெளிவான திட்டமுள்ளதாக அவர் கூறினார். மேலும்,
அரச சேவையாளர்களுக்கு உள்நாட்டு, வௌிநாட்டு பயிற்சியளிக்க வேண்டும். அரச சேவையாளர்களுக்கு உரிய சம்பளத்தினை வழங்குதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் செயலாற்ற வேண்டும். நாட்டில் காணப்படும் ஊழலைத் தடுப்பதற்கு சிறந்த, வெளிப்படையான அரச சேவையை உங்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கின்றேன்
என கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்