விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

by Staff Writer 30-10-2019 | 6:57 AM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 8000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 22 மாவட்டங்களைக் கேந்திரமாகக் கொண்டு டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்படும் பகுதிகளில் சட்டம் கடுமையாக அமுலாக்கப்படும் எனவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 60000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.