உமா ஓயா மேம்பாட்டுத் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு 

உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு...

by Staff Writer 30-10-2019 | 7:24 AM
Colombo (News 1st) உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றைய தினம் (30) மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. குறித்த திட்டத்தின் கீழ் அலிகொடஆர, டயபரா, புஹுல்பொல மற்றும் ஹந்தபானாகல ஆகிய நீர்த்தேக்கங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அலிகொடஆர நீர்த்தேக்கம் 5200 அடி நீர் கொள்ளவைக் கொண்டமைந்துள்ளது. இதேவேளை, கரந்தகொல்ல நீர்மின் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பரிசீலனை செய்வார் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வௌியிட்டுள்ளது. அடுத்த வருடம் 120 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய கரந்தகொல்ல மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.