யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு 120 மில்லியன் ஒதுக்கீடு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு 120 மில்லியன் ஒதுக்கீடு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு 120 மில்லியன் ஒதுக்கீடு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2019 | 8:00 am

Colombo (News 1st) உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு பில்லியன் ரூபாவினை இலங்கைச் சுற்றுலாத்துறை இந்த ஆண்டில் முதலீடு செய்துள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு இந்த விடயத்தினைக் கூறியுள்ளது.

அத்துடன், சந்தைப்படுத்தலுக்கென பிரத்தியேக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் அபிவிருத்தியினூடாக வட கிழக்கு மாகாணங்களில் பாரிய முன்னேற்றங்கள் நிகழும் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்