நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் மழை

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2019 | 10:34 am

Colombo (News 1st) வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று (30) கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட, வட மத்திய, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்