தற்காலிக அடையாள அட்டைக்குப் பதிலாக பாதுகாப்புக் காகிதத்தை பயன்படுத்தலாம்

தற்காலிக அடையாள அட்டைக்குப் பதிலாக பாதுகாப்புக் காகிதத்தை பயன்படுத்தலாம்

தற்காலிக அடையாள அட்டைக்குப் பதிலாக பாதுகாப்புக் காகிதத்தை பயன்படுத்தலாம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2019 | 1:24 pm

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்காக விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளுக்குப் பதிலாக விசேட பாதுகாப்பு காகிதமொன்றைப் பயன்படுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்காலிக அடையாள அட்டைக்காக இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்காலிக அடையாள அட்டையாக வழங்கப்படவுள்ள பாதுகாப்புக் கடதாசியில் விண்ணப்பதாரியின் புகைப்படம் மற்றும் ஏனைய விபரங்களுடன் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் கையொப்பம் என்பன உள்ளடக்கப்பட வேண்டும்.

தற்காலிக அடையாள அட்டைக்குத் தேவையான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கத் துரித நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் இணக்கப்பாட்டுக்கு அமைய பாதுகாப்புக் கடதாசியைத் தற்காலிக அடையாள அட்டையாக ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்