தபால் மூல வாக்களிப்பில் யாருக்கு ஆதரவளிப்பது என கூற முடியாதுள்ளது: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தபால் மூல வாக்களிப்பில் யாருக்கு ஆதரவளிப்பது என கூற முடியாதுள்ளது: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2019 | 10:25 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று நடத்திய பேச்சுவார்த்தை முடிவின்றி நிறைவுபெற்றுள்ளது.

13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் அறிக்கைகள் வெளிவராத நிலையில், எந்தவொரு வேட்பாளருக்கும் நாளை தபால் மூல வாக்களிப்பில் ஆதரவளிக்குமாறு கூற முடியாதுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமிழ் வாக்காளர்கள் தவறாது தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்